வருக மெரினா வானொலி

வரலாற்றுப் பெருமை மிக்க சென்னையிலிருந்து நம்ம தமிழகத்தின் தலைநகரிலிருந்து தமிழர்களின் அடையாளமாய் இணையம் வழியாக இயங்கும் உலகத்தரமான வானொலியே நமது 'மெரினா FM!'

காற்று வாங்க மெரினா கடல்... பாட்டுக் கேட்க மெரினா FM!

'நம்ம ஊரு மெட்ராஸ்'

'நம்ம ரேடியோ மெரினா FM! '

சென்னை! இன்று சுமார் 80 லட்சம் மக்கள் தொகை நிறைந்த பிரமாண்ட மாநகரங்களில் ஒன்று. எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தமிழகத்தின் தலைநகரம். இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் தலைநகரம் என்பதை விட, உலகில் உள்ள தமிழர்களின் முக்கிய பயன்பாட்டு நகரம் என்று சொல்வது இன்னும் சிறப்பாக இருக்கும். '

இன்றும் கம்பீரமாக வரலாற்றுச் சுவடுகளை தன்னகத்தே வைத்திருக்கும் இந்த நகருக்கு இன்றுடன் 380 வயது ஆகிறது. தான் தோன்றிய நாள் முதல் இன்று வரை, தன்னைத் தேடி பிழைக்க வந்தவர்களுக்கு வாழ்வளித்த நிலப்பகுதியாகவே சென்னை இருந்துவருகிறது.

நிகழ்ச்சிகள்

ஆலோசனைகள்